ஆர்.எஸ்.எஸ். மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் தொண்டர்கள் 1987ஆம் ஆண்டு அந்த இடத்தைச் சுத்தம் செய்த போது பிரச்னை ஏற்பட்டது. 12பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஆக்கிரமிப்பு செய்த இடத்தை மீட்டு ஹிந்து சமுதாய மக்களின் பித்ரு கார்யங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்று 38 ஜாதி சங்கங்களைச் சேர்ந்தவர்கள் இணைந்து ‘அனைத்து ஹிந்து சமுதாய சங்கம்’ என்ற பெயரில் ஒரு அமைப்பை ஏற்படுத்தினர். ஊர் முக்கியஸ்தர் திரு C.பொன்னுசாமி கவுண்டர் தலைமையில் அரசாங்கத்துக்கு மனு அளித்தனர். ஆவணங்களை சரிபார்த்த அரசு அதிகாரிகள் அந்த இடத்தை ஆக்கிரமிப்பு நபர்களிடமிருந்து மீட்டனர். அனைத்து ஹிந்து சமுதாய சங்கத்தினரின் கோரிக்கையை ஏற்று மேட்டுப்பாளையம் நகராட்சி 2003ஆம் ஆண்டு மயானத்தின் ஒரு பகுதியை நந்தவன பயன்பாட்டுக்காக கொடுக்க ஒப்புதல் அளித்தது.
அங்கு அவர்கள் மயானத்தை அழகுபடுத்தியும், படித்துறை அமைத்தும் அருமையான நந்தவனத்தையும் உருவாக்கியுள்ளனர். இந்த மயானமும், நந்தவனமும் அனைத்து ஜாதியினருக்கும் பொதுவானது என்பது விசேஷம்.
தென்னகத்தின் வற்றாத ஜீவநதியான பவானி நதியின் கரையோரம் அமைந்துள்ளது இந்த இடம். காசியின் அரிச்சந்திர மயானத்தின் அமைப்பைப் போலவே, இயற்கையாகவே அமைந்த பவானி நதியின் தென்கரையில் மயானமும், மயானத்தை ஒட்டிய பகுதியில் நந்தவனமும் அமைந்துள்ளது. தெற்கில் காசியில் இருந்து கொண்டுவரப்பட்ட சிவலிங்கம் அமைந்த ஸ்ரீமாதேஸ்வரர் ஆலயமும் அமைந்துள்ளது.
இந்த இடத்தில் ஆடி, தை அமாவாசை காலத்திலும், புரட்டாசி மாத மாகாளய அமாவாசை காலங்களிலும் 50,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடி பித்ரு கார்யங்களை செய்து வருகிறார்கள்.
இதில் என்ன விசேஷம் என்றால், பட்டியல் சமுதாய மக்களிடமும், பித்ரு கார்யம் செய்ய வேண்டிய அவசியத்தைப் பற்றி எடுத்து கூறி, இன்று அவர்களும் ஆயிரக்கணக்கில் வந்து கலந்து கொள்கிறார்கள்.
இங்கு கார்யம் செய்யும் புரோகிதர்களும் கார்யம் செய்வதற்கு பணம் கட்டாயப்படுத்துவது இல்லை. கொடுக்கின்ற தொகையை வாங்கிக் கொள்கின்றனர்.
இங்கு சுற்றுப்புறச் சூழல் பணியும் நல்ல முறையில் நடைபெற்று வருகிறது. மேட்டுப்பாளையத்தில் உருவாகிற குப்பைகளை இங்கு பிரித்து, இயற்கை உரமாகவும் உற்பத்தி செய்யப்படுகிறது.
இது போன்ற மயானமும், சிரார்த்தக் கூடமும் தமிழகத்தில் எங்கும் இல்லை என்பது சிறப்பு. சமுதாய நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இது விளங்குகிறது.
#
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக